மனைவி அளித்த புகாரின்பேரில் கைதான இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மீது அவரது மனைவி அஸ்மிதா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். தன்னை விஷ்ணு அடித்து துன்புறுத்தியதாகவும், தன் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணயில், அஸ்மிதா, விஷ்ணுவின் தாய், தங்கை ஆகியோரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், விஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.