சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.
காமகோடி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி விநாயகர் மற்றும் கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம் மற்றும் கோயில் கட்டுமான பணிகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.