மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக நமீபியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சில மாதங்களுக்கு முன்பு பெண் பிரதமரை தேர்ந்தெடுத்த நமீபியா, வரலாற்று சிறப்பு மிக்க நாளை கொண்டாடியதாக தெரிவித்தார்.
மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, இது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எதுவும் இல்லாதவர்களுக்குக்கூட அரசியலமைப்பின் உத்தரவாதம் இருப்பதாக தெரிவித்தார்.