நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2024-ல் நடந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர் புருஸ் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இருதரப்பினர் இடையே குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புருஷ் தரப்பினர் விசாரணைக்கு ஆஜராகததால் வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் குறுக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.