திருப்பூரில் சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பா அவர் விடுத்துள்ள பதிவில், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிர்சேதமும் நிகழவில்லை என்பது மனதுக்கு ஆறுதல் அளித்தாலும், இருப்பிட வசதியின்றி புலம்பெயர் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.
செய்வதறியாது கையறு நிலையில் இருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக இருப்பிட வசதி ஏற்படுத்தித் தந்து அவர்களது நலனைக் காக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.