செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய டிஜிட்டல் பதிப்பாக தனுஷ் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் – சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ திரைப்படம் கடந்த 2013-ல் வெளியாகி ‘ஹிட்’ அடித்தது.
இந்த படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின், ஏஐ தொழில்நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் ஒலி வடிவமைப்புடன் புதிய டிஜிட்டல் பதிப்பாகத் தனுசின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்ஸ்விவிங் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழகத்தில் இப்படத்தை ஆகஸ்டு 1-ஆம் தேதி வெளியிடுகிறது.