தஞ்சை மாவட்டம் சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை, சத்துணவுக்கூட வசதியில்லாததால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதியே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.
இருப்பினும் கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்குத் திறந்தவெளியையே பயன்படுத்தும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதே போல சத்துணவுக்கூடமும் அமைக்கப்படாததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.