ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
வரும் 20ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், முதலில் டி20 போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணிக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.