காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!
Aug 29, 2025, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின்  கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர்  ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? உடனடியாக, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Police not under Chief Minister Stalin's control: Annamalaitoday newsTn newsமுதலமைச்சர் ஸ்டாலின்காவல்துறைTODAY CRIME NEWS
ShareTweetSendShare
Previous Post

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

Next Post

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

Related News

முதலமைச்சர் கோப்பை பரிதாபங்கள் : கொந்தளிக்கும் சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள்!

மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி – கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies