ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரமோற்சவம் கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து வழிபட்டனர்.