கோவை மாவட்டம் சூலூரில் காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர் அருகே சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சூலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு கார்களை மடக்கிச் சோதனையிட்டதில், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 235 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காரை ஓட்டி வந்த இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















