கூட்டுறவு சங்கங்களை அரசு, கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 25 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, கூட்டுறவு சங்கங்களில் இனி பயிர்க்கடன் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறினார்.
சிபில் ரிப்போர்ட்டின் அடிப்படையில் பயிர்க்கடன் வழங்கப்படும் என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், தங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஒவ்வொரு மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டங்களை முன்னெப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.