கார்த்தி நடிக்கும் 29ஆவது படத்தின் பெயரை போஸ்டர் வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது.
வா வாத்தியார் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் – 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கவுள்ள புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு மார்ஷல் எனப் பெயரிட்டுப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.