மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்டை மூடிய 12 வயது சிறுவனை இளைஞர் சரமாரியாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அம்பர்நாத்தின் பலேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கடந்த 4ஆம் தேதி, சிறுவன் ஒருவன், 14ஆம் மாடியில் டியூசனுக்கு செல்ல லிப்டில் சென்றான்.
அப்போது கைலாஷ் தவானி என்ற இளைஞர் 9ஆவது மாடியில் லிப்டுக்கு காத்திருந்தார். சிறுவன் லிப்டை திறக்காமல் மூடியதால் ஆத்திரமடைந்த கைலாஷ், லிப்டினுள் நுழைந்து சிறுவனைச் சரமாரியாகத் தாக்கினார்.
இந்த காட்சி, லிப்டில் இருந்த சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து சிறுவனைத் தாக்கிய நபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.