2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் ரங்கசாமி, 2021-ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை போன்று, 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்போம் என்றும், பிரதமருடன் நல்ல நட்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பேட்டியளித்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரியில் அடுத்த மூன்று, நான்கு நாட்களில் புதிய பாஜக அமைச்சர் பதவி ஏற்பார் என்று தெரிவித்தார். மேலும், தங்களுக்கு 2026 தேர்தல் தான் இலக்கு என்றும், தேர்தல் நேரத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அதைப் பற்றி அப்போது யோசிப்போம் எனவும் அவர் கூறினார்.