கோவையில் காரில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து, காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் இரவில் காரில் சென்ற இளைஞரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்த உக்கடம் காவல் நிலைய போலீசார், சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் யார், எதற்காக காவலர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் கெஞ்சியும், அழுதும் விடாத போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.