நெல்லையில் தவெக கட்சி வண்ணத்திலிருந்த படகுகளுக்கு மானியம் வழங்க அதிகாரிகள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூட்டப்புளி கிராமத்தில், த.வெ.க. கட்சிக்கொடி வண்ணம் பூசப்பட்ட 10 மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானியம் வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன் வளத் துறை அலுவலகத்தில் முறையிட்டபோதும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மானியம் வழங்காத அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.