மதுரையில் குரூப் 4 வினாத்தாள்கள்களை தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது.
இதையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து தனியார் பேருந்துகளில் வினாத்தாள்களை அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்துகளின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு A4 பேப்பர் ஒட்டி சீல் வைத்துப் பாதுகாப்பு எனக் கூறி அதிகாரிகள் அனுப்பி வைத்தது சர்ச்சையாகி உள்ளது.