சென்னை அம்பத்தூரில் தனியார் குடியிருப்பு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தனக்குச் சொந்தமானதென திமுக கவுன்சிலர் தெரிவித்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர் மண்டலத்தின் 82ஆவது வார்டில் டிஎன்இபி காலனி குடியிருப்போர் நலச் சங்கத்திற்குச் சொந்தமாக 2 ஆயிரத்து 100 சதுர அடி இடம் உள்ளது.
இந்த இடத்தை சுற்றிலும் எல்லைக் கற்கள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த திமுக கவுன்சிலர் ரமேஷ் என்கிற நீலகண்டன், எல்லைக் கற்களை உடைத்துச் சேதப்படுத்தினார்.
இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவரை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அந்த இடத்தில் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வருவதாகக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து திமுக கவுன்சிலர் புறப்பட்டுச் சென்றார்.