பல்லடம் திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியது மகிழ்ச்சியளித்தாக பறந்து போ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான பறந்து போ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பறந்து போ படக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அருணோதயா திரையரங்கிற்குச் சென்ற பறந்து போ படக்குழுவினர் ரசிகர்களைச் சந்தித்தனர்.
அவர்களிடம் உரையாடி படத்தில் பிடித்த காட்சிகள் குறித்துக் கேட்டு ரசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய படக்குழுவினர், மக்களைச் சிரிக்க வைப்பதற்காக இந்த படத்தை எடுத்ததாகவும், அதனால்தான் மக்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தனர்.