சாவன் மாதத்தின் தொடக்கத்துடன் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பக்தர்கள் கன்வார் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
சாவன் மாதத்தில் சிவபெருமானுக்காகப் பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் சாவன் மாத பிறப்பைத் தொடர்ந்து பக்தர்கள் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரியில் புனித நீராடி, சிவாலயங்களை நோக்கி பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.