முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!
Jul 26, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான நாற்காலி சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பதால்,  துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான புகைச்சல், தற்போது கொளுத்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  முதலமைச்சராக வேண்டும் எனக் கூறும் அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பின், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டு, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.

இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர உடன்பாடு எட்டப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஒப்பந்தப்படி, முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும், டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் எனக் கொக்கரித்து வருகின்றனர்.

பிரச்சனை பூதாகரமான நிலையில், முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ பொதுவெளியில் வாய் திறக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் கடிவாளம் போட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டனர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, தாம் தான் கர்நாடகாவின் முதலமைச்சர் என்றும், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்றும் கூறினார்.

கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், தங்களுக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது சித்தராமையா முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்று கூறியிருப்பது டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: Who will be the Chief Minister?: Chair fight in Karnatakaகர்நாடகாவில் நாற்காலி சண்டை
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

Next Post

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

Related News

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies