கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெறிநாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவரது மகன் ராம்சரன் சாலையில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று சிறுவனைத் துரத்திச் சென்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ராம் சரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதே போலத் தர்கா பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது அவரையும் வெறிநாய் துரத்திச் சென்று கடித்தது.
இதில் காயமடைந்த முத்துலட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.