அதிதி ஷங்கர் குரலில் `பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் அதிதி ஷங்கர் குரலில் உருவாகியுள்ள பாடல் வெளியாகியுள்ளது.
















