டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோருமை வரும் 15ஆம் தேதி திறக்க உள்ளது.
உலகின் முன்னணி கார் நிறுவனமாக டெஸ்லா விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓட்டுநரில்லா கார்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவின் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ஆம் தேதி திறக்க உள்ளது.
மும்பை மேற்கு குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4 ஆயிரம் சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.