2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கணித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற 62ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் 2047-ல் தனிநபரின் வருமானம் கிட்டத்தட்ட 9 மடங்கு உயரும் எனத் தெரிவித்தார்.
பல்துறை ஊழியர்களின் திறமை மற்றும் செயல்பாடு, பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் ஆன்மிக கலாச்சாரம், முன்னேற்றத்திற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும் எனக் கூறினார்.
சீனர்கள் 12 ஆண்டுகள் உழைத்து 300 பில்லியின் டாலர்களைச் செலவு செய்து உருவாக்கிய 5G இணையச் சேவையை, நாம் வெறும் இரண்டரை வருடங்களிலேயே தயாரித்து விட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அவர்,
2047-ல் சீனாவில் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும் எனக் கூறினார். பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத் 2047-ஐ நனவாக்க இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 10 சதவீதம் தொடர்ந்து உயர வேண்டுமெனக் கூறிய அஜித் தோவல்,
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.