அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு, 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.
இதில் ஒரேயொரு பயணியை தவிர, 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது.
இந்த நிலையில், விமான விபத்து தொடர்பாக 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதாகவும்,
அதற்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் மேலே எழும்ப முடியாமல் தரையில் விழுந்து நொறுங்கியதாகவும்,
கட்டடம் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …..