தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4, ஆயிரத்து 922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படவுள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு, காலை 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.