புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாஜக அமைச்சரான சாய் சரவணகுமார் கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜான்குமாரை புதிய அமைச்சராக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரும் 14ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படவுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.