வீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்திற்கு நேற்று வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.