குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வதோதரா – ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீதுள்ள காம்பிரா பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா தெரிவித்துள்ளார்.