கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம் ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது.
ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வரைந்த சச்சினின் உருவப்படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை சச்சின் டெண்டுங்கர் திறந்து வைத்தார்.