அகமதாபாத் விமான விபத்திற்கு முன்னதாக, இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கருப்புப் பெட்டி மூலம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 15 பக்க அறிக்கையில், விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானிகள் கடைசியாக பேசிய Cockpit ஆடியோ விபரங்கள் விசாரணை அறிக்கையில் வெளிடப்பட்டுள்ளது.
“எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்” என ஒரு விமானியிடம் மற்றொரு விமானி கேட்டதாகவும், “நான் அடைக்கவில்லை” என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே முழு அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.