இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.