விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கை எதிர் கொண்டார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6க்கு 2, 6க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து அவர் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.