FIFA தரவரிசையில் மிகவும் மோசமான நிலைக்கு இந்தியக் கால்பந்து அணி தள்ளப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்திற்கான எதிரான சர்வதேச நட்பு போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இதனால் பிபா தரவரிசையில் 133ஆவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகவும் மோசமான இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.