ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நில அளவீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையின்போது அலட்சியமாகப் பதிலளிக்கும் வட்ட துணை அளவையரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பூரணி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நிலப் பிரச்சனையில் நிலத்தை அளவீடு செய்யுமாறு மனு அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நில அளவையர் முருகன், அளவீடு செய்யப் பயன்படுத்தும் கருவியின்றி பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய சசிகுமாரிடம், தான் அளவிடுவதுதான் சரி என்று அதிகார தொனியில் பதிலளிக்கும் முருகனின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.