டெல்லியில் தொழில் போட்டி காரணமாகச் சுற்றுலா நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ரோகிணி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்திற்குள் புகுந்த 4 மர்ம நபர்கள், நிறுவன ஊழியர்கள் இருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் போட்டியின் காரணமாகத் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.