தனது சமூக வலைத்தள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த ராமதாஸ், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் முகநூல் பக்கங்களின் கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாக மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், தனது சமூக வலைத்தள கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டெடுக்கத் தேவையான தகவல்கள் வேறொரு நபரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகார் மனுவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளை அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.