மகாராஷ்டிராவில் புதிய சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சரக்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவின் பீட் பகுதியில் புதிதாகச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலைப் பணியைப் பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்தது.
இதனால் அங்கிருந்த பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.