ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் “SPARSH” மொபைல் வேன் பிரசார திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த இருப்பதாகப் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான டிஜிட்டல் ஓய்வூதிய அமைப்பான “SPARSH”, தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட மொபைல் வேன் பிரசாரத்தை சென்னையில் நிறைவு செய்தது.
இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள சிடிஏ அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “SPARSH” மொபைல் வேன் பிரசாரம் 30 மாவட்டங்களைக் கடந்து சென்னை வந்தடைந்ததாகத் தெரிவித்தார்.
குறைதீர் கூட்டம் மற்றும் பிரசார வாகனம் மூலமாக 12 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், மொபைல் வேன் பிரசார திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.