வேறு அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் நாங்களும் விற்பனை செய்கிறோம் என நாமக்கல்லில் அரசு டாஸ்மாக் கடை ஊழியர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஓடபள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் ஒருவர் மது வாங்கச் சென்றுள்ளார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கடை ஊழியர் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுப்பிரியர் கூடுதல் வசூல் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் மற்ற அரசு டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி ரேட்டுக்கு மது விற்பனை செய்தால் நாங்களும் விற்க தயார் எனவும் உங்களுக்கு பில் போட்டு தரும் அளவுக்கு எங்களுக்கு நேரமில்லை என்றும் அடாவடியாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.