கோவையில் போலீசாரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த திமுக மாவட்ட துணை செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 7 ம் தேதி மாற்றுக் கட்சியினர் பேனர் வைத்திருந்ததை கண்டித்த திமுகவினர் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உதவி காவல் ஆய்வாளர் அஜய் சர்மாவை திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அவர் மீதும், திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.