தஞ்சை மாவட்டம் திருவேங்கட உடையான்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீழத்தெருவைச் சேர்ந்த சிறுவர்களான பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் ஆகியோர் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயில் விழாவிற்கு, பெற்றோருடன் சென்றிருந்தனர்.
விழா முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், நீண்ட நேரமாகியும் கள் பிள்ளைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
மருதக்குடி பிள்ளையார் கோயில் குளத்தில் கிடந்த 3 சிறுவர்களையும் கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டது பரிசோதனையில் தெரியவந்தது.