திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் மரணம் தற்கொலையாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரைக் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்றுதான் உள்ளதாகவும், அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிவதாகவும் கூறினார். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் காவல் துறை மிரட்டியதாக எங்கும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காவல் துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு விடுமுறை கொடுத்தது தாம்தான் என்றும், துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.