திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இன்று மதுரை வரவுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்றம், அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து, திருப்புவனம் போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தற்போது தொடங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ-யின் டிஎஸ்பி மோகித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வரவுள்ளனர்.