RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!
Apr 29, 2026, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 13, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடக மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சமி நில பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆயிரத்து 891 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலம், தீர்வை நிலம், கண்டிசன் நிலம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டன.

அத்தகைய பஞ்சமி நிலங்களைப் பட்டியலின சமூகத்தினரைத் தவிர்த்து வேறு எந்த சமூகத்தினரும் உரிமை கோர முடியாத அளவிற்கு அந்த காலத்திலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்காகத் தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவையில் மட்டும் அத்தகைய நிலங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை இயற்றத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தவறான தகவலை அளித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரம் ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவரது வாரிசுதாரர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்திய போது தான் அந்நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதே தெரியவந்துள்ளது.

எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சமி நிலைச்சட்டத்தை இயற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: tn news todayShocking information revealed in RTI: 10000 acres of Panchami land encroached uponRTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்000 ஏக்கர் பஞ்சமி நிலம்10tamil nadu news today
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

Next Post

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies