ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும், மெக்சிகோவுக்கும் 30 சதவீதம் அதிக வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் தொடர்ந்து அதிக வரி விதித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோ நாட்டு பொருட்களுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தென் அமெரிக்காவின் போதைப்பொருள் மையமாக மெக்சிகோ மாறி வருவதாகவும், ஐரோப்பிய யூனியனின் வரி கொள்கையால் அமெரிக்காவுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.