இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியஅணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியும் 387 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து விளையாடிய இந்தியா, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற 3ம் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரிஷப் பண்ட் 74 ரன்களும், ஜடேஜா 72 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியாக அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 387 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் அடித்ததால் சமநிலையில் உள்ளன.