தமிழகத்தில் இணையதளங்களில் மொழிகள் மோசமாக கையாளப்படுவதாகவும், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாக தெரிவித்தார்.
அழகு தமிழில் எதிர்ப்பு சொல்லுங்கள், அழுக்கு தமிழில் எதிர்க்க வேண்டாம் என்றும், அவதூறாக பேசும் தொண்டர்களை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண் தலைவர்களை இஷ்டத்துக்கு பேசி வருவது மாற வேண்டும் எனறும் தமிழிசை சௌந்தரராஜன் விருப்பம் தெரிவித்தார்.